பிக்பாஸ் டைட்டிலுக்கு பின்னர் ஆரி நடிக்கப்போகும் முதல் படம்!

பிக்பாஸ் டைட்டிலுக்கு பின்னர் ஆரி நடிக்கப்போகும் முதல் படம்!

Update: 2021-01-19 18:15 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில்  மக்களின் மனதை வென்று  டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றார் நடிகர் ஆரி. இவர் டைட்டிலை வென்றதற்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் ஆரி ஏற்கனவே எல்லாம் மேல் இருக்குறவன் பாத்துக்குவான், அலேகா, பகவான் ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னரான பின் ஆரி ஒப்பந்தமான முதல் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. செளரியா புரடொக்சன்ஸ் மற்றும் அபின் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் 'ஆரி' நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அபின் என்பவர் இயக்க இருக்கிறார். ஆரியுடன் இந்த படத்தில் நடிகை வித்யா பிரதீப் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் இயக்குனர்கள் சுந்தரராஜன், ஏ.ஆர் முருகதாஸ் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரி மற்றும் வித்யா பிரதீப் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தை பற்றிய தகவலை இனி வரும் நாட்களில்  காண்போம்.

Similar News