'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாசகத்துடன் வெளியான 'பகாசூரன்' பர்ஸ்ட் லுக்

இயக்குனர் மோகன் ஜி'யின் 'பகாசூரன்' இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Update: 2022-05-30 01:32 GMT

இயக்குனர் மோகன் ஜி'யின் 'பகாசூரன்' இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.





'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரவுபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் மோகன் ஜி இவர் அடுத்தபடியாக இயக்குனர் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியம் ஆகிய இருவரையும் வைத்து 'பகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.





இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகி உள்ளது. அதில் மகாபாரதப் புத்தகம் ஒரு மேசையில் இருக்க பக்கத்தில் ஒரு மொபைல் போன் உள்ளது. மேலே 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என படத்தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News