ஆக்சன் லுக்கில் அசத்தும் ப்ரிதிவிராஜின் 'கடுவா' போஸ்டர்
நடிகர் பிரித்திவிராஜ் நடித்துள்ள முழுநீள ஆக்ஷன் படமான 'கடுவா' படத்தில் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
நடிகர் பிரித்திவிராஜ் நடித்துள்ள முழுநீள ஆக்ஷன் படமான 'கடுவா' படத்தில் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
ஆக்சன் படங்களுக்கு என்ற பெயர் பெற்ற மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் 'கடுவா'. இப்படத்தில் பிரித்திவிராஜ் ஆக்ஷன் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'அவர்கள் சண்டையை விரும்பினார்கள் இவன் அவர்களுக்குப் போரை தந்தான்' என்கின்ற வாசகத்துடன் வெளியான இந்த போஸ்டர் பிரித்திவிராஜ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.