பிக்பாஸ் சாண்டி நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
பிக்பாஸ் சாண்டி நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!;
பிக்பாஸ் மூன்றாவது சீஸன் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடன இயக்குனர் சாண்டி.நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே ஜாலியாகவும் மக்களுக்கு எண்டர்டெய்னராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் திரையுலகின் நடன இயக்குனராக இருந்து வரும் சாண்டி விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் ஏற்கனவே தெரிந்ததே.
சாண்டி ஹீரோவாக நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. சாண்டி ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தில் டைட்டில் 3.33 என்றும் இந்த படத்தை நம்பிக்கை சந்துரு என்பவர் இயக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடிகாரத்தின் பின்னணியில் உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் என்பவர் இசையில் உருவாகும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Thanq somuch sir ❤️❤️🤩🤩 https://t.co/XVDi7pcwta
— SANDY (@iamSandy_Off) January 3, 2021