இணையத்தை கலக்கும் 'பொன்னியின் செல்வன்' கட் டீசர்
மணிரத்தினம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'பொன்னியின் செல்வன்', அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நேற்று திடீரென கட் டீசர் ஒன்றை வெளியிட்டனர் படக்குழுவினர். அதில் 'சோழர்கள் வருகிறார்கள்' என்ற வாசகங்களுடன் ரகுமானின் பின்னணி இசையில் 10 வினாடிகள் ஓடக்கூடிய டீஸராக அமைந்துள்ளது. தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் விரைவில் படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.