பிக்பாஸில் வெளியேறிய பிறகு ரியோ வெளியிட்ட முதல் வீடியோ!

பிக்பாஸில் வெளியேறிய பிறகு ரியோ வெளியிட்ட முதல் வீடியோ!;

Update: 2021-01-21 17:12 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில் பல சுவாரசியமான நிகழ்வுகளும், சண்டைகளும் நடைபெற்றன. அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யார் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும், இதனை அடுத்து இரண்டாவது ரன்னராக ரியோவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து வீட்டுக்கு சென்ற ரியோவுக்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் என்பதும் பட்டாசு மேளதாளங்கள் முழங்க அவரை வரவேற்றனர்.

ரியோ தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் முதல் முறையாக வீடியோ ஒன்றை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: எல்லோருக்கும் வணக்கம் நான் இப்போது ரொம்ப நன்றாக இருக்கிறேன்.

பிக்பாஸ் சீசன் 4 எனக்கு ஒரு அழகான நல்ல பயணமாக இருந்தது. அதை நான் வெளியில் வந்து பார்த்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். நீங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் அன்பை வெளியில் வந்து பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் எனது நன்றி


இனிமேல் நிறைய வேலை இருக்கிறது. அதை எல்லாவற்றையும் பிளான் பண்ணி பண்ணலாம். இந்த அளவுக்கு எனக்கு பாசிட்டிவிட்டி கொடுத்த உங்கள் எல்லோருக்கும் ரொம்ப நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்களும், ரசிகர்களும் அவர்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News