'என்னா படம் செம' - ஹாலிவுட் எழுத்தாளர் புகழ்ந்த ஆர்.ஆர்.ஆர்
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ஹாலிவுட் பட எழுத்தாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ஹாலிவுட் பட எழுத்தாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூளை குவித்த படம் ஆர்.ஆர்.ஆர் உலகம் முழுவதும் இப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.
இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர் ராபர்ட் கார்கில் என்பவர் இந்த படத்தை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் அதில், 'இதுவரை நான் பார்த்த படங்களில் நேர்மையான, வெறித்தனமான, வித்தியாசமான பிளாக்பஸ்டர் திரைப்படம் இது. என் நண்பர்கள் அழைப்பின்பேரில் பார்க்க சென்றேன் தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்' என தெரிவித்துள்ளார்.