மாஸ்டர் படக்காட்சிகளை லீக் செய்தவர் கண்டுபிடிப்பு.!

மாஸ்டர் படக்காட்சிகளை லீக் செய்தவர் கண்டுபிடிப்பு.!;

Update: 2021-01-12 10:11 GMT

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா தொற்று ஏற்பட்டு திரையரங்கம் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் படம் திரையிடப்படாமலே இருந்து வந்தது. இதனிடையே கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட பின்னர் திரையரங்கை திறக்கலாம் என அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து புதிய படங்களை வெளியிடுவதற்கு படக்குழு தயாராகியுள்ளது.

அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி மாஸ்டர் படத்தை திரையிட படக்குழு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் வருகின்ற 13ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான படக்டிக்கெட்டுகள் இணையதளங்களில் புக்செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏராளமான ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் அனைத்து திரையரங்கிலும் மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாக இணையத்தில் படத்தின் சில காட்சிகள் வெளியானது. இது படக்குழுவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே மாஸ்டர் படக்காட்சிகளை லீக் செய்தது சோனி டிஜிட்டல் சினிமாஸ் நிறுவன ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லீக்கானது தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர் மீது புகாரளிக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News