இறுதியாக கிருஷ்ணரின் விஸ்வரூபத்தை பற்றி பாடிவிட்டு மறைந்த எஸ்.பி.பி
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய கடைசி பக்தி ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய கடைசி பக்தி ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தோற்று காரணமாக மரணமடைந்தார், பல நூற்றுக்கணக்கான பாடல்களை திரையில் பாடி இருந்தாலும் அவரின் பக்தி பாடல்கள் ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்நிலையில் அவரின் கடைசி ஆல்பமாக பாடிய பக்தி ஆல்பம் வெளியாகி உள்ளது 'விஸ்வரூப தரிசனம்' என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம் கிருஷ்ணரின் புகழ்பாடும் ஆல்பம் ஆகும். குறிப்பாக மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூபத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் நிறைந்த தொகுப்பு இது.
ஏற்கனவே பல பாடல்கள் எஸ்.பி.பி தனது குரலால் பாடி இருந்தாலும் இந்த பாடல் தொகுப்பை ரசிகர்கள் பெருமளவில் வரவேற்று வருகின்றன.