வலைதளத்தில் வைரலான மீனா நடிக்கும் புதிய படத்தின் தோற்றம்!

பல மாதங்களுக்குப் பிறகு மீனா மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார்.அவர் நடிக்கும் புதிய படத்தின் புதிய தோற்றம் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

Update: 2023-09-22 13:15 GMT

தமிழில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த மீனா மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரது கணவர் உடல்நல குறைவால் மரணம் அடைந்த நிலையில் சில மாதங்கள் சினிமாவிலயே நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். 'ரவுடி பேபி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மலையாளத்தில் 'அனந்தபுரம் டைரிஸ்' என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் வக்கீல் வேடத்தில் மீனா நடிக்கிறார். வக்கீலாக அவர் நடிப்பது இதுதான் முதல் முறை என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீகாந்த் ,மனோஜ் கே.ஜெயன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். ஜெய ஜோஸ் ராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மீனா வக்கீல் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வலைதளத்தில் வைரல் ஆகிறது.

SOURCE :DAILY THANTHI

Similar News