தனுஷின் திருச்சிற்றம்பலம் - ஆடியோ வெளியீடு விழா பற்றி கசிந்த தகவல்
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகிய மூவரும் ஹீரோயினாக நடித்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தனிஷ் மற்றும் அனிருத் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளன எனவே இந்த படத்தின் பாடல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் வரும் ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று பட ஆடியோ வெளியீட்டு விழா வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.