ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து அசத்திய நயன், விக்கி ஜோடி - குவியும் பாராட்டுகள்

தங்களது திருமணத்தை முன்னிட்டு நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி ஆதரவற்ற ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Update: 2022-06-10 05:32 GMT

தங்களது திருமணத்தை முன்னிட்டு நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி ஆதரவற்ற ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.




கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டது. திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்றவர்களுக்கு உதவும் விதமாக ஒரு லட்சம் பேருக்கு விருந்தளித்து பாராட்டை பெற்றுள்ளனர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி.




தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் பேருக்கு விரிந்து வழங்கியுள்ளனர். குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது அவர்கள் வழங்கியதில் இருக்கும், அதில் ஆதரவற்றவர்கள் இல்லம், முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியவர்கள் இல்லம், சிறுவர்கள் இல்லை என அனைத்தும் அடங்கும் இந்த புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகி பரபரப்பை பரபரப்பையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

Similar News