'புஷ்பா 2' - பகத் பாசில் விலகிவிட்டாரா?
புஷ்பா 2 படத்திலிருந்து பகத் பாசில் விலகி உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புஷ்பா 2 படத்திலிருந்து பகத் பாசில் விலகி உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கில் தயாரி க்கப்பட்டு வெளியாகிய இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் 'புஷ்பா', அல்லு அர்ஜுன் நடித்த இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி 500 கோடி அளவில் வசூலை பெற்றது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் மிகப்பிரமாண்டமாக முயற்சி செய்து வருகின்றனர், இந்நிலையில் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பகத் பாசில் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என தகவல்கள் கசிந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த தகவலை மறுத்துள்ளனர். பகத் பாசில் இந்த படத்தில் நடிப்பதாகவும் இதனால் ரசிகர்கள் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுள்ளனர் கேட்டுக் கொண்டுள்ளனர்.