பாகுபலி படத்தில் நடித்த குழந்தையின் புகைப்படம் வைரல்: இவரா இது..?

பாகுபலி படத்தில் நடித்த குழந்தையின் புகைப்படம் வைரல்: இவரா இது..?;

Update: 2021-02-07 18:02 GMT

தமிழ்மொழி மட்டுமில்லாமல்  பழமொழிகளில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட படம் பாகுபலி. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனர் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கியுள்ள படத்தில் பிரபாஸ், ராணா நடித்து பாகுபலி திரைப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் பெற்றது. இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டில் பாகுபலி இரண்டாம் பாகமும்  வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அப்படத்தில் நடித்த  குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.மேலும் பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு இவர் தான் மகிழ்மதி தேசத்தின் அடுத்த அரசன் என்று முழங்குவார் என்பதும், அதன்பின்னர் அந்த குழந்தையை காப்பாற்ற ஆற்றில் இறங்கி வருவார் என்பது அறிந்ததே.

இந்த குழந்தை தற்போது யு.கே.ஜி படித்து வருவதாகவும், குழந்தையின் பெயர் 'தன்வி' என்றும்  சமூக வலைத்தளங்களில் தற்போது இருக்கும் புகைப்படத்துடன்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்து  பாகுபலியின் ரசிகர்கள் இவரா இந்த குழந்தை என்று ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News