ஜாக்கி பாண்டியனாக மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா வெளியானது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் புதிய போஸ்டர்

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடிகர் எஸ்‌.ஜே.சூர்யா "ஜாக்கி பாண்டியன்" என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Update: 2022-10-05 12:44 GMT

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடிகர் எஸ்‌.ஜே.சூர்யா "ஜாக்கி பாண்டியன்" என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது, அவரது போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.




 

இந்த திரைப்படத்தை "திரிஷா இல்லனா நயன்தாரா" மற்றும் சிம்புவின் AAA படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார், ரித்து வர்மா நாயகியாக நடிக்கிறார், ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான ENEMY திரைப்படத்தை தயாரித்த வினோத் குமார் மிக பெரிய பொருட்செலவில் "மார்க் ஆண்டனி" திரைப்படத்தை தயாரிக்கிறார்,




 

இது 1960,1980 களில் நடக்கும் ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி வருகிறது, விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா பல புதிய கெட்டப்பில் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 2023 இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Similar News