ஒரே இரவில் இணையத்தை ஆக்கிரமித்த விஜய்யின் 'வாரிசு' போஸ்டர்

இணையங்களில் விஜய்யின் புது படத்தின் போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது.

Update: 2022-06-22 04:58 GMT

இணையங்களில் விஜய்யின் புது படத்தின் போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது.




இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படத்தின் தலைப்பு தற்காலிகமாக 'தளபதி 66' என வைத்திருந்தனர், இந்த நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை தயாரிப்பு நிறுவனம் விஜய் படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வெளியிட்டுள்ளது.


 



அந்தவகையில் விஜய் நடிக்கும் 66 வது படத்திற்கு 'வாரிசு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் ஸ்டைலாக விஜய் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர், நேற்று மாலை முதலே இது இணையங்களில் தீயாக வைரலாகி வருகிறது.

Similar News