'என் ராசாவின் மனசிலே' என்ற படத்தின் 2-பாகம் எடுக்கும் பிரபல நடிகரின் மகன்!

'என் ராசாவின் மனசிலே' என்ற படத்தின் 2-பாகம் எடுக்கும் பிரபல நடிகரின் மகன்!;

Update: 2021-02-01 17:45 GMT

தமிழ் சினிமாவில் 80-90களில்  முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ்கிரன். அந்தவகையில் 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கிய "என் ராசாவின் மனசிலே" என்ற திரைப்படம்  வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இப்படத்தில் அறிமுக கதாநாயகியாக மீனா நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது அறிந்ததே.

இந்நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகி 30-வருடங்கள் ஆகும் நிலையில்  இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் அவரது மகன் திப்புசுல்தான் நைனார் முகமது என்பவர் இரண்டாம் பாகம் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. இவர் இயக்கும் முதல் படம் இதுதான் என்பது இவருக்கு இன்று 20-வது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

இதுகுறித்து ராஜ்கிரண் கூறுவது: இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள். என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரே இந்தப் படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.இதற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News