'கோப்ரா' - மனதை அள்ளும் ரஹ்மான் ஸ்டைல் மெலடி

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' புதிய அப்டேட் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது.

Update: 2022-07-04 09:44 GMT

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' புதிய அப்டேட் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது.




 

'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள படம் 'கோப்ரா', விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கே.எஸ் ரவிக்குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மீனாட்சி ஆகியோர் நடித்துள்ளனர் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.




 

இந்நிலையில் 'கோப்ரா' திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள பாடல் ப்ரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள 'உயிர் உருகுதே' பாடல் ப்ரமோ இணையத்தில் தீயாக வைரலாகி வருகிறது. மேலும் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

Similar News