மாஸ்டர் படத்தின் டிக்கெட் விலை ரூ.5,000.? ரசிகர்கள் அதிர்ச்சி.!

மாஸ்டர் படத்தின் டிக்கெட் விலை ரூ.5,000.? ரசிகர்கள் அதிர்ச்சி.!;

Update: 2021-01-11 17:32 GMT

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாகவும் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் அறிவிப்பு வெளியான நாள் முதல் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பழைய படத்தையே திரையரங்கில் போடப்படுவதை காண முடிந்தது. இதற்கு காரணம் திரையரங்கில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே நீண்ட நாட்களுக்கு பின்னர் திரையரங்கில் புதிய படம் ரீலீஸ் செய்வது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட திரைப்பட்டாளள் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சில தியேட்டர்களில் சட்டவிரோதமாக அப்படத்தின் டிக்கெட்டின் விலையை ரூ.500 முதல் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த டிக்கெட் விலை உயர்வால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவ்வளவு பணம் கொடுத்து படத்தை பார்க்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனை அரசு முறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News