சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' படத்தில் இவ்வளவு சஸ்பென்ஸா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 169வது படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 169வது படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 169 ஆவது படத்தின் தலைப்பை 'ஜெயிலர்' என வைத்துள்ளனர் படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
ரத்தக் கறை படிந்த கத்தியுடன் 'ஜெயிலர்' என்ற படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. சமூகவலைதளம் முழுவதும் இப்படத்தின் போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன, மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரும் முழு நீள திரைக்கதையை வடிவமைக்கிறார்.