மாளவிகா மோகன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்! டீசர் வெளியீடு!

மாளவிகா மோகன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்! டீசர் வெளியீடு!;

Update: 2021-02-15 17:18 GMT

தளபதி விஜய் நடித்து வெளிவந்த படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடித்திருந்த நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பு பெற்றிருந்தார்.அதன்பின் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று இவர் நடிக்கும் படம் பற்றி ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒரு முக்கிய அறிவிப்பு வரப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில் மாளவிகா மோகன் அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்க போவதாகவும்,பாலிவுட் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரது  டுவிட்டர் பக்கத்தில் டீசர் வீடியோவை வெளியிட்டு இந்த படத்தின் டைட்டில் 'யுத்ரா' என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

சித்தார்த் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ரவி உதயவார் என்பவர் இயக்கி வருகிறார். யுத்ரா படத்தின் டீசரில் திரில்லர் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும்  உள்ளது என நெட்டிசன்கள், ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News