நயன்-விக்கி திருமணம் ஓடிடி'யில் ஒளிபரப்பாகிறதா?
தனது திருமண நிகழ்ச்சியையும் மிகப்பெரும் வியாபாரத்தை மையமாக வைத்து திட்டமிட்டுள்ளனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர்.
தனது திருமண நிகழ்ச்சியையும் மிகப்பெரும் வியாபாரத்தை மையமாக வைத்து திட்டமிட்டுள்ளனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர்.
விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜூன் 9ஆம் தேதி அதிகாலை முதல் 5:30 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை கொடுக்கும் பணியை விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமணப் ஒளிபரப்பு உரிமையை ஓடிடி தளம் அல்லது தனியார் தொலைக்காட்சிக்கு கொடுக்கலாமா என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர், இது உறுதியாகும் பட்சத்தில் ஏதேனும் ஒரு ஓடிடி தளம் அல்லது தனியார் தொலைக்காட்சியில் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியரின் திருமணம் ஒளிபரப்பாக கூடும்