தீயாக வைரலாகும் பிரம்மாஸ்த்ரா 'தேவா தேவா', சிவனின் பக்தி பாடல்

பிரம்மாஸ்த்ரா படத்தின் சிவபெருமானின் சக்தி பாடல் ஒன்று தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

Update: 2022-08-11 10:02 GMT

பிரம்மாஸ்த்ரா படத்தின் சிவபெருமானின் சக்தி பாடல் ஒன்று தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.


 



பாலிவுட்டில் தயாராகி வரும் மிக பிரமாண்டமான படம் பிரம்மாஸ்த்ரா, சிவபெருமானின் சக்திகளில் ஒன்றான அக்னி சக்தியை பெற இக்கால இளைஞன் ஒருவன் முயற்சி செய்வதாக அமைந்துள்ளது கதைக்களம். இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது.




 

இதில் அபிதாபச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா அக்நினேனி உள்ளிட்ட பல நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கிய இப்படத்தில் இடம்பெற்ற 'தேவா தேவா' என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் படத்தின் நாயகன் ரன்பீர் கபூர் சிவனின் சக்தியை பெறும் போது அந்த பாடல் அதன் பின்னணியில் ஒலிக்க இருக்கிறது. இது ஒரு வகையான பக்திப்பாடல்களும் ஆகும் மேலும் இப்பாடல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Similar News