'ஜவான்' வில்லனாக விஜய் சேதுபதி ஷாரூக்கானிடம் மோதவிருக்கிறாரா?

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-07-06 08:07 GMT

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன் நடிக்கும் திரைப்படம் 'ஜவான்', இதன் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இப்படத்தில் வில்லன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.




 

இந்த நிலையில் 'ஜவான்' படத்தின் டைட்டில் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியான முன்னிட்டு படத்தின் வில்லனை கதாபாத்திரத்தை வடிவமைக்க படக்குழு தயாராகி வருகிறது. இதில் பாகுபலியில் வில்லனாக நடித்த ரானா டகுபதி மற்றும் விஜய் சேதுபதி'யிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இவர்கள் இருவரில் ஒருவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஷாருக்கான் உடன் மோதும் வில்லன் விவரம் விரைவில் வெளியாகும்.

Similar News