"என் பாட்டு வரியை எனக்கே மாற்றி அனுப்புகிறார்கள்": வைரமுத்துவின் வைரல் ட்வீட்.!
"என் பாட்டு வரியை எனக்கே மாற்றி அனுப்புகிறார்கள்": வைரமுத்துவின் வைரல் ட்வீட்.!;
தமில் சினிமாவில் பிரபல முன்னணி பாடலாசிரியரும், கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார். அந்த வகையில் இந்தியா முழுவதும் டீசல், பெட்ரோல் விலை அதிகமாகி வரும் நிலையில் 100 ரூபாயை தொட்டுவிடும் என்று பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் பல நெட்டிசன்களும், மீம்ஸ் கிரியேட்டர்களும் பெட்ரோல் விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் பதிவாக்கி வருகின்றனர்.எனவே ஒரு நெட்டிசன் ஒருவர் வைரமுத்துவின் பாடலை வைத்து பெட்ரோல் விலை உயர்வு குறித்த கவிதை எழுதி அவருக்கே அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது:
என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்:
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் பெட்ரோல் விலையுயர்வு குறித்து காமெடியாக வைரமுத்துவின் பாடலை வைத்து இன்னும் பல மீம்ஸ்கள் ஆக உருவாக்கியுள்ளனர்.அவை உசுரே போகுது உசுரே போகுது பெட்ரோல் விலைய பார்க்கையிலே..
பசி எடுத்தால் சொல்லி அனுப்பு; கேஸ் இருந்தால் சமைக்கிறேன்..இன்னும் பல வரிகளை மாற்றியும் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
என் பாட்டு வரியை மாற்றி
— வைரமுத்து (@Vairamuthu) February 17, 2021
எனக்கே அனுப்புகிறார்கள் :
'காதல் வந்தால் சொல்லி அனுப்பு;
பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’#PetrolDieselPriceHike