இதுதான் எனக்கு பெரிய விருது - ஜெயராமின் நெகிழ்ச்சி
சிறந்த விவசாயிக்கான கேரளா அரசின் விருது பெற்றார் நடிகர் ஜெயராம்.
சிறந்த விவசாயிக்கான கேரளா அரசின் விருது பெற்றார் நடிகர் ஜெயராம்.
மலையாள முன்னணி நடிகர் ஜெயராம் சினிமாவில் நடித்து வந்தாலும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 8 ஏக்கர் பலப்பரவில் ஒரு மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். அதிலிருந்து 60க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது அதோடு பல ஏக்கர் நிலங்களில் அவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேரள மாநில விவசாயத் துறை சார்பில் நடைபெற்ற விவசாய தின நிகழ்ச்சியில் கேரளா முதல்வர் பிரணாயி விஜயன் கேரளா ஜெயராமுக்கு சிறந்த விவசாய விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய நடிகர் ஜெயராம், 'பத்மஸ்ரீ விருதை விட இந்த விவசாய விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது' என கூறி அதன் புகைப்படத்தையும் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.