#BiggBoss4 - இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்? வருத்தத்தில் ஆரி ரசிகர்கள்!
#BiggBoss4 - இந்த வாரம் வெளியேறுவது இவர்தான்? வருத்தத்தில் ஆரி ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனிதா வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் 5 நபர்கள் வெளியேற்றப்பட தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் ரம்யா, சோம், ஷிவானி, ஆஜித், கேப்ரியலா ஆகியோர் வெளியேற்றப்பட தேர்வு செய்யப்பட்டனர். எனவே இன்று பிக்பாஸ் வீட்டில் 8 நபர்கள் இருக்கும் நிலையில் இறுதிப் போட்டிக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் இந்த வாரமும், அடுத்த வாரமும் டபுள் எவிக்சன் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்றவர் ஆஜித் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இந்த வாரம் ஆஜித் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆரியை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள், அவரிடம் சண்டை போட்டவர்கள் ஆரி ஆதரவாளர்களால் வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், இந்த வாரம் ஆரியை விமர்சனம் செய்த ரம்யாவை வெளியேற்ற ஆரி ரசிகர்கள் முயற்சி செய்தனர்.
இதனை ரம்யாவின் சகோதரரும் மறைமுகமாக ரம்யாவிடம் தெரிவித்தார். ஆனால், இந்த வாரம் ரம்யா தப்பியது ஆரி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். மேலும் இன்றைய நிகழ்ச்சியில் என்னதான் ஆக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.