நடிகை ராதிகா 'சித்தி 2' சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான்!

நடிகை ராதிகா 'சித்தி 2' சீரியலில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான்!;

Update: 2021-02-14 10:48 GMT

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து, தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் சித்தி 2 என்ற சீரியலில் நடித்து வந்தார் நடிகை ராதிகா. இவர்  இந்த சீரியலில் இருந்து  விளங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில்  அதிகாரப்பூர்வமாக சீரியலில் இருந்து விலகுவதாக ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் சித்தி 2 என்ற மெகா சீரியல் இருந்து நான் வெளியேறும் முடிவை வருத்தத்துடன் எடுத்திருக்கிறேன் என்றும், இத்தனை ஆண்டுகளில் மிகச்சிறந்த உழைப்பை கொடுத்த சீரியல் இது என்பது எனக்கு பெருமையே என்றும், என்னுடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் குட் பை என்று சொல்லி அந்த சீரியல் இருந்து அவர் விலகினார்.

அவர் ஏன் சித்தி 2 சீரியல் இருந்து விலகியது என்பது குறித்த தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருந்தன. மேலும் சில  நாட்களாக அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சிக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார் ராதிகா. அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் நடிகை ராதிகா சட்டசபை தேர்தலில் அவர் ஒரு முக்கிய தொகுதியில் போட்டியிடப் போவதாகவும், முழுநேர அரசியல்வாதியாக மாற சீரியலில் இருந்து விலகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

Similar News