உயிருக்கும், தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.. நடிகர் ரஜினியை சீண்டும் கஸ்தூரி.!
உயிருக்கும், தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.. நடிகர் ரஜினியை சீண்டும் கஸ்தூரி.!;
உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என்று நடிகர் ரஜினியின் அறிவிப்பு பற்றி நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த மாதம் 31ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார். இதனிடையே அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்குவதை நிறுத்தி விட்டார். இனிமேல் அரசியலிலும் ஈடுபட போவதில்லை என வெளியிப்படையாக அறிவிப்பு வெளியிட்டார்.
அவரது அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்றே கூறலாம். ரஜினி மக்கள் மன்றத்தினரும் மிகவும் அதிருப்தி அடைந்தனர். அவருடன் இருந்த காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்தார். ரஜினியின் கருத்துக்கு பல அரசியல் தலைவர்கள் தங்களின் ஆதரவையும், ஒரு சிலர் எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே.
இப்ப இல்லை, எப்பவுமே இல்லை! கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்” என்றார்.
கஸ்தூரியின் பதிவு நடிகர் ரஜினி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவுக்கு ரசிகர்கள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.