அமேசானில் வெளியாகும் நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்.!
தில்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் ‘துக்ளக் தர்பார்’. இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகிறது.
தில்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் 'துக்ளக் தர்பார்'. இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் தற்போது நடந்து முடிந்து விட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் துக்ளக் தர்பாரை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.