சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியீடு!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியீடு!

Update: 2021-01-27 16:47 GMT

நடிகர் சிவகார்த்திகேயன் பல படங்களில் நடித்து அப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அந்த வகையில் இவர் கனா போன்ற படங்களை தயாரித்து மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே நேற்று சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி  சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டைட்டில்  இசையமைப்பாளர்,மற்றும் இயக்குனர், குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் டான் (Don)  என்றும், படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி எனவும்,அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அறிவிப்பு  ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து என்பதும் தற்போது புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அயலான் மற்றும் டாக்டர் படம்  படப்பிடிப்புகள் முடிவடைந்ததினால் சில மாதங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் டான் படத்தின்  படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்றும் தெறிகிறது.இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News