'பரமபதம் விளையாட்டு' நேரடியாக ஓடிடியில் வெளியாகும்:ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகாமல் போய்விட்டது.;

Update: 2021-04-03 13:50 GMT

நடிகை திரிஷா நடிப்பில் 'பரமபதம் விளையாட்டு' தயாராகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். இப்படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகாமல் போய்விட்டது. சுமார் ஒரு வருடமாக வெளியாகாமல் இருந்த இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என்று கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.




இந்நிலையில், பரமபதம் விளையாட்டு படம் ஓடிடி ரிலீஸ் செய்வதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் (ஏப்ரல்) 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News