ஜெயிலரை தொடர்ந்து புதிய இரண்டு திரைப்படங்கள் - 2023ல் மூன்று திரைப்படங்கள் ரஜினிகாந்த் 3.0 அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர்" திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். ஜெயிலர் 2023 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-10-06 08:23 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் "ஜெயிலர்" திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். ஜெயிலர் 2023 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




 

ஜெயிலரை தொடர்ந்து இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இரண்டு படங்களை லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.


 



அதில் முதல் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன "டான்" பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க விருப்பதாகவும், மற்றொரு திரைப்படத்தை ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க விருப்பதாகவும் தகவல் வெளியான உள்ளன.

அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News