திறமையான நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் வருத்தமளிக்கிறது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் !

கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று (அக்டோபர் 29) மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக மாநில முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2021-10-30 08:03 GMT
திறமையான நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் வருத்தமளிக்கிறது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் !

கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று (அக்டோபர் 29) மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக மாநில முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மிகவும் திறமையான நடிகர் புனித் ராஜ்குமார் மரணம் வருத்தமளிக்கிறது. தனது நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றவர். கன்னட திரையுலகில் பல இனிமையான நினைவுகளை கொண்டு வந்தார். அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சக நடிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவை கன்னட மொழியிலேயே இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source,Image Courtesy: Twiter


Tags:    

Similar News