ஒன்றிய அரசு இல்லை..மத்திய அரசு தான்! தி.மு.க.வுக்கு சவுக்கடி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி!
திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்த பின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பிரிவினைவாதத்துடன் கூறி வருகிறது. அதிலும் குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் சார்பு ஊடகங்களும் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.;
திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்த பின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பிரிவினைவாதத்துடன் கூறி வருகிறது. அதிலும் குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவர்களின் சார்பு ஊடகங்களும் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் தாதா சாகேப் பால்கே விருதுபெறுவதற்காக சென்னையில் இருந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, மத்திய அரசின் தாதா சாகேப் விருது வாங்குவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
அதாவது தனக்கு விருது வழங்குவது மத்திய அரசுதான் என்று ரஜினி மிகவும் அழுத்தமாக பதிவிட்டிருந்தார். சர்ச்சையை தவிர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் தனக்கு தாதா சாகேப் விருது கிடைப்பது மகிழ்ச்சி என்று ரஜினி சொல்லியிருக்கலாம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து கிடைப்பது என்று கூறியிருப்பதன் மூலமாக மத்திய அரசு மத்திய அரசுதான் ஒன்றிய அரசு இல்லை என்று தனது தரப்பு கருத்தை இதன் மூலம் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
Source, Image Courtesy: One India