சர்வதேச விருது குறித்து வைரமுத்து பதிவிட்ட வைரல் பதிவு!

சர்வதேச விருது குறித்து வைரமுத்து பதிவிட்ட வைரல் பதிவு!

Update: 2021-02-26 18:47 GMT

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி பாடலாசிரியரும், கவிஞருமான கவிப்பேரரசு என்று அன்போடு அழைக்கப்படுபவர் வைரமுத்து.  இவர் தற்போது ஆஸ்கர் விருது குறித்து ட்வீட்டரில் ஓரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் திரைப்படங்கள் பல மொழி திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்ட நிலையில் தற்போது பல தமிழ் திரைப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து சர்வதேச விருதுகளையும் பல தமிழ் திரைப்படங்கள் பெற்று வருகின்றன.



 

எனவே சமீபத்தில் வெளியான 'என்றாவது ஒருநாள்' க/பெ ரணசிங்கம் மற்றும் 'சியான்கள்' ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருதுகளை பெற்று தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமையை சேர்த்தது.இந்த நிலையில் இதுகுறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

'என்றாவது ஒருநாள்', 'க/பெ ரணசிங்கம்', 'சீயான்கள்' - ஆகிய திரைப்படங்கள் சர்வதேச விருது கொண்டது பெருமிதம் தருகிறது. முதலிரு படங்களுக்கு நான் பாட்டெழுதிப் பங்கு செலுத்தியது பரவசம் தருகிறது. விரைக தமிழர்களே! இனி அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் என அந்த பதிவில்  பதிவிட்டு இருக்கிறார். 

எனவே க/பெ ரணசிங்கம் திரைப்படம் சர்வதேச விருதை பெற்றுள்ளதையடுத்து இதனை படக்குழுவினர், கொண்டாடி வருகின்றனர்.மேலும் இப்படத்தில் சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி ஆகியோருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Similar News