வானதி, பூங்குழலி கதாபாத்திரங்கள் அறிவிப்பு வெளியானது - அதிகரிக்கும் பொன்னியின் செல்வன் எதிர்பார்ப்பு

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களை பற்றிய அடுத்தடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Update: 2022-09-05 06:49 GMT

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களை பற்றிய அடுத்தடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.




இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் வரலாற்று புதினமான 'பொன்னியின் செல்வன்' தற்பொழுது திரைப்படம் ஆகியுள்ளது. இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இந்த மாதம் இறுதியில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.





இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் மேலும் சில நடிகர்களின் கதாபாத்திரம் மற்றும் பெயர்கள் வெளியாகி உள்ளன அந்த வகையில் பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்பொழுது பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி வானதியாக சோபிதா துலிபாலா'வும் நடிக்கின்றனர், இவர்களுடன் சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், செம்பியன் மாதிரியாக ஜெயசித்ரா, மதுராந்தகனாக ரகுமான் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Similar News