வெளியாகும் முன்னரே லாபத்தை அள்ளிய 'வாரிசு'
படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் முதலீட்டை மொத்தமாக அள்ளி உள்ளது 'வாரிசு'
படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் முதலீட்டை மொத்தமாக அள்ளி உள்ளது 'வாரிசு'
தெலுங்கில் பிரபல தயாரிப்பான தில் ராஜு இயக்கத்தில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு', இப்படத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகின்றனர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தை தற்பொழுது துவக்கி விட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, படத்தின் பெரிய நட்சத்திர கூட்டமே நடப்பதால் போட்டியிட்டு தியேட்டர் உரிமையில் வாங்க பெரும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் 100 கோடி குடுத்து இதன் ஓ.டி.டி உரிமையை வாங்கியுள்ளதாகவும் பிரபல சாட்டிலைட் சேனல் ஒன்று 65 கோடி கொடுத்து படத்தை வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன மேலும் ஹிந்தி உரிமை தனியாக 30 முதல் 40 கோடி வரை செல்லலாம் என்கிறார்கள். ஆக மொத்தம் பணத்தின் தயாரிப்பு செலவு மொத்தத்தையும் ஓ.டி.டி மற்றும் சேட்டிலைட் உரிமத்தில் பெற்றுள்ளது 'வாரிசு'.