'வாரிசு' - லீக்கான வீடியோ, அதிர்ச்சியில் படக்குழுவினர்

இணையத்தில் 'வாரிசு' படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-22 02:04 GMT

இணையத்தில் 'வாரிசு' படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




 

தில் ராஜு தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என பலர் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'.



இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நடைபெறும் வேளையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாக உலா வருகிறது, இதில் விஜய் நடந்து வருவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் இந்த வீடியோ எப்படி வெளியானது என படக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

Similar News