"துணிவு"க்கு முன்பே வெளியாகும் "வாரிசு" களைகட்டபோகும் பொங்கல்

பொங்கலுக்கு விஜயின் "வாரிசு" மற்றும் அஜித்தின் "துணிவு" முடிவாகிவுள்ளது.

Update: 2022-10-14 06:39 GMT

பொங்கலுக்கு விஜயின் "வாரிசு" மற்றும் அஜித்தின் "துணிவு" முடிவாகிவுள்ளது. இதற்கு முன் 2014ல் வீரம் மற்றும் ஜில்லா என அஜித், விஜய் படங்கள் நேரடியாக மோதிக்கொண்டன.


எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 



ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி துணிவு ஜனவரி 12 வியாழக்கிழமையும், வாரிசு ஜனவரி 11 புதன்கிழமையும் வெளியாகும் என கூறப்படுகிறது.

முதல் நாள் ஓபனிங் வசூல் மற்றும் பெரிய திரையரங்குகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இப்படி ஒரு நாள் முன்னரும் பின்னரும் வெளியிடலாம் என இரண்டு படக்குழுவும் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




 

விரைவில் இரண்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News