பிக்பாஸ் பாலாஜியை கடுமையாக விமர்சித்த வேல்முருகன் - என்ன நடந்தது?
பிக்பாஸ் பாலாஜியை கடுமையாக விமர்சித்த வேல்முருகன் - என்ன நடந்தது?;
பிக்பாஸ் சீசன்-4ல் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்றைய நாள் வரை பல சுவாரசியமான நிகழ்வுகளும், சண்டைகளும்,பிரச்சினைகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்தவகையில் பிக்பாஸில் இரண்டாவது வாரத்தில் ரேக்கா வெளியேற்றப்பட்டதை அடுத்து கடந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்ட வேல்முருகன் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் பாலாவிற்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வேல்முருகன் கூறுவது: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எங்களுக்கு ஒரு டாஸ்க் வைத்தார்கள் அதில் 16 போட்டியாளர்களும் அவர்களது வாழ்க்கையை எவ்வாறு இந்த நிலைமைக்கு வாழ்ந்து வந்தார்கள் என்பதை சொல்ல வேண்டும் என்று அந்த டாஸ்க் இருந்தது. அப்போது பாலாஜி உருக்கமாக அப்பா, அம்மா இருவரும் குடிகாரர் எனவும் அப்பா அடிப்பார் எனவும் கூறியிருந்தார். இவர் இவ்வாறு கூறிய செய்தி போட்டியாளர்களை மட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்களையும் மன வருத்தத்தில் ஆழ்த்தியது.ஆனால் பாலா என்னிடம் கூறும் பொழுது நான் தான் தந்தையை அடித்தேன் என்று கூறினார்.இவ்வாறாக அவர் மாற்றி மாற்றி பேசுவது எனக்கு அவர் மேல் சந்தேகம் வந்தது, மேலும் பாலா துடைப்பத்தால் தரையில் அடித்த விதத்தில் தான் பயந்தேன், அதே தீவிரத்தினால் அவனை அடித்தால் என்ன நடக்கும் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.இவர் இவ்வாறாக அவருடைய அணுகுமுறையும், உடல்வாகுபாடும் என்னை பயப்பட செய்தது.பாலா கடுமையாக நடந்துகொள்வதை பிக்பாஸ் ஏன் கேட்கவில்லை என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.