காதலர் தினத்தில் நயன்தாரா குறித்த தகவலை வெளியிடும் விக்னேஷ் சிவன்..!

காதலர் தினத்தில் நயன்தாரா குறித்த தகவலை வெளியிடும் விக்னேஷ் சிவன்..!;

Update: 2021-02-10 16:26 GMT

காதலர் தினத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான  நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.  இப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வரும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்தநிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து விட்டது என விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு காதலர் தினமாக பிப்ரவரி-14 ஆம் தேதி வெளியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் என்ன அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

Similar News