விஜய் படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!
விஜய் படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி.. அமைச்சர் கடம்பூர் ராஜூ.!;
பொங்கலுக்கு திரைக்கு வரும் மாஸ்டர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கத் தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’ ஓடிடி வெளியீடு என்று பலமுறை செய்திகள் கசிந்தது. இறுதியாக திரையரங்குகளில்தான் படம் வெளியாக முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்த வருடம் ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் படம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 80 சதவீதம் அளவிற்கு மாஸ்டர் படத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கு திரையரங்க உரிமையாளர்களும் சம்மதம் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் ‘மாஸ்டர்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டால் அரசு பரிலீத்து அனுமதி அளிக்கும். படத்தை தியேட்டரில் வெளியிடும் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும், ஓடிடி போன்ற தளங்களில் படம் வெளியிடுவது சிறந்தது இல்லை எனவும் கூறியுள்ளார்.