'வாரிசு' ஆடியோ எப்போது வெளியீடு தெரியுமா?

தொடர்ச்சியாக மூன்று போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டதன் மூலம் ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து அளித்துள்ளார் விஜய்.

Update: 2022-06-23 07:05 GMT

தொடர்ச்சியாக மூன்று போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டதன் மூலம் ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்து அளித்துள்ளார் விஜய்.




நேற்று நடிகர் விஜயின் பிறந்தநாள் ரசிகர்களால் மற்றும் சினிமா உலகத்தினரால் கொண்டாடப்பட்டது, இதனை முன்னிட்டு 'வாரிசு' படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு அடுத்தடுத்த சிறிது நேர இடைவெளியில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் திக்குமுக்காடிப் போய் உள்ளனர் இதன் காரணமாக இணையத்தில் போஸ்டர் வைரலாகி வருகிறது.





இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் எனவும் அதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News