பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் "வில்லனாக" களமிறங்கும் விஜய் பட நடிகர்!
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் "வில்லனாக" களமிறங்கும் விஜய் பட நடிகர்!;
தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த தில் என்ற படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் "ஆசிஷ் வித்யார்த்தி". அதன் பிறகு முன்னணி கதாநாயகர்களின் படங்களில் வில்லனாக நடித்து கதாநாயகர் போலவே வில்லனுக்கும் தனி இடத்தை பிடித்தவர் இவர். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற படத்தில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிகாட்டி அப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா உள்பட பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பல வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்த "ஆசிஷ்" தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 'எக்கோ' என்ற படத்தில் நடிக்கிறார். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் படத்தில் இதுவரை நாம் காணாத வில்லனாக பார்க்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், கதாநாயகியாக வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
மேலும் அறிமுக இயக்குனராக நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர். இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் மீண்டும் இவரை திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இன்னிலையில் கடைசியாக ஆசிஷ் 2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.