'விஜய் தான் நம்பர் ஒன்' - தில் ராஜு கொளுத்திப்போட்ட வெடி
விஜய் அடுத்ததுதான் அஜித் என வாரிசு தயாரிப்பாளர் கொளுத்தி போட்ட விவகாரம் தற்போது பரபரப்பாகி வருகிறது.
விஜய் அடுத்ததுதான் அஜித் என வாரிசு தயாரிப்பாளர் கொளுத்தி போட்ட விவகாரம் தற்போது பரபரப்பாகி வருகிறது.
தற்பொழுது விஜய் இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் வெளியீடு தொடர்பாக சில முரண்பாடுகள் இருக்கின்றன.
துணிவு, வாரிசு ஆகிய இரு படங்களுக்கும் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் இது குறித்து தற்பொழுது வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மௌனம் கலைத்துள்ளார். இது குறித்து தில்ராஜு அளித்த பேட்டியில் கூறியதாவது, 'தமிழ் சினிமாவில் விஜய் தான் நம்பர் ஒன் நடிகராக உள்ளார். அஜித்துடன் ஒப்பிடும் போது அவர் தான் டாப்பில் உள்ளார் தமிழகத்தில் உள்ள 900 திரைகளில் 'வாரிசு' திரைப்படத்திற்கு சரி பாதி ஒதுக்கி உள்ளனர் இது ஏற்புடையதல்ல.
இது ஒரு தொழில், வணிகரிதியாக பார்க்கும் போது அஜித்தை விட விஜய் தான் கூடுதல் வியாபாரத்தில் உள்ளார். இதனால் வாரிசு திரை படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்க வேண்டும், இது தொடர்பாக சென்னைக்கு சென்ற உதயநிதியை சந்தித்து பேச உள்ளேன்' என்றார்.
அஜித், விஜய் ஆகிய இருவரும் இரு துருவங்கள் என்ற நிலையில் அவரது ரசிகர்களில் யார் முதலிடம் என இணைய போர்கள் எழும் நிலையில் இப்பொழுது விஜய் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அஜித் தான் நம்பர் ஒன் என கூறாமல் விஜய்யை நம்பர் ஒன் எனக் கூறியது இரு தரப்பு ரசிகர்களிடையே மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.