ஓடிடியில் ரீலீசாகும் 'கடைசி விவசாயி'

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் திரைக்கு வெளிவர இருக்கும் புதிய படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.;

Update: 2021-05-28 09:08 GMT

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் திரைக்கு வெளிவர இருக்கும் புதிய படங்கள் அனைத்தும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' படமும் இணைந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டிருந்தது.


 



ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News