மாஸ்டர் பட புதிய தகவலை வெளியிட்ட விஜய் சேதுபதி!

மாஸ்டர் பட புதிய தகவலை வெளியிட்ட விஜய் சேதுபதி!;

Update: 2020-11-13 14:10 GMT

மாஸ்டர் திரைப்படம் முடிக்கப்பட்டு கொரோனா காரணமாக ஆறு மாத காலங்களுக்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் நேற்றைய அறிவிப்பின்படி டீசர் பற்றிய முக்கிய அறிவிப்பு வரும் என்று  தகவல் வந்தது. அதன்படி தீபாவளியன்று டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். தற்போது மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். அந்தவகையில் இந்த படத்தை பற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு #MASTERTeaser ரிலீஸ் செய்வது நவம்பர் 14-ம் தேதி தீபாவளியன்று மாலை 6 மணி அளவில் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியையும், கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். பலர் தீபாவளி விருந்தாக மாஸ்டர் திரைப்படம் வெளியிடப்படுமா என்று இருந்த நிலையில் தற்போது அப்படத்தின் டீசர் வெளியீடு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Similar News