மாஸ்டர் படம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலளித்த விஜய் சேதுபதி!
மாஸ்டர் படம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலளித்த விஜய் சேதுபதி!;
தளபதி விஜய் நடித்த முடித்து வெளிவந்த படம் மாஸ்டர். இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பின்னர் திரையரங்குகளுக்கு மக்கள் அதிகமாக வந்து பார்த்த படம் மாஸ்டர்.
அந்தவகையில் மாஸ்டர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி இந்த படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது: 'மாஸ்டர்' திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த விஜய் சார் அவர்களுக்கும் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் மக்களுக்கும் மிகவும் நன்றி.
திரும்பவும் மக்கள் தியேட்டருக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் பல பேருக்கு வாழ்க்கையை, நம்பிக்கையை தொடங்கி வைத்துள்ளது என்றும் கூறியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க அதிக வசூலை பெற்றதுக்கு காரணம் விஜய் அவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் மாஸ்டர் திரைப்படம் விஜய்சேதுபதி படம் என ரசிகர்கள் கூறி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன என நிருபர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கேட்ட கேள்விக்கு, "நான்தான் ஏற்கனவே இந்த படம் விஜய் சார் அவர்களால் தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று சொல்லிவிட்டேனே, அதன் பிறகு இந்த கேள்வி அவசியமில்லாதது" என்று சாதுர்யமாக கூறினார். இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய கருத்திற்கு எதார்த்தமாக பதில் அளித்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.