கொரோனா தொற்று அதிகரிப்பு: விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு ஒத்திவைப்பு.!

நடிகை கத்ரீனா கைப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

Update: 2021-04-28 03:51 GMT

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற படம் உருவாகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 15ம் தேதி தொடங்குவதற்கு திட்டமிட்டு இருந்தனர். அந்த நேரத்தில் நடிகை கத்ரீனா கைப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.




 


இதனிடையே அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த போதிலும், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பை தற்போது காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர்.

Similar News